மக்கள் பசுமை இயக்கம்

மக்கள் பசுமை இயக்கம் நடத்திய உலக சுற்றுசூழல் தினம் ஜுன் 5_2022 இன்று திருவள்ளூர் மாவட்டம் திரு.கெஜவீரபாண்டியன் மாவட்ட பொது செயலாளர் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக நிறுவனர்/தலைவர் திரு.நாஞ்சில் C.மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக DGM.பிரபாகரன் மாநில ஆலோசகர் மற்றும் மாநில செயலாளர் செல்வி.மனோஷர்மி மற்றும் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் செங்கல்பட்டு திரு.பொன் மலர் பாண்டியன் (நகர மன்ற தலைவர்) திருவள்ளூர் மற்றும் இரா.விஜய குமார் ,MC(22 வந்து வார்டு கவுன்சிலர்) திருவள்ளூர்கோல்டு கோபால் (வழக்கறிஞர் உயர் நீதிமன்றம்) திருவள்ளூர் திரு.கரண்ட் கார்த்திக் (வழக்கறிஞர்) திருவள்ளூர் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சம் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை அறிமுக நிகழ்ச்சியாக நடைபெற்றது.மஞ்சப்பை ஒரு தட்டு மற்றும் வாழைப்பழம்,புடவை வெற்றிலை பாக்கு ,வீட்டு பழ மரக்கன்று வைத்து மக்களிடையே தாம்பூல பை கொடுத்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.மேலும் காவல் ஆய்வாளர் திருமதி பத்மஸ்ரீபபி அவர்கள் க...